ரஜினியின் ‘ஜெயிலர்’ மற்றும் ‘தலைவர் 170’ படங்களின் அப்டேட் வெளியானது

0
10

ஜெயிலர்: கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூரில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் ரஜினியின் 169வது படமாக உருவாகியுள்ளது.

rajinin's jailer movie update

பட அட்டவணையின்படி, படத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் முடிவடைய உள்ளதால் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு அன்று சன் பிக்சர்ஸ் துவங்கப்பட்ட தினம் என்பதால் அன்றைய தினம் இப்படம் வெளிவந்தால் இரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த படம் முடிந்த பிறகு ரஜினி லைகா தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு 170வது படமாக அமைகிறது. அதனால் ‘தலைவர் 170’ படத்திற்கான சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here