ஜெயிலர்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினியின் 169வது படமாக உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் தனது 4வது படமாக இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அடுத்தாண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் ‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடித்து வரும் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ அடங்கிய சிறப்பு புரோமோ ஒன்றை வெளியிட்டது. அந்த புரோமோவில் நடுத்தர வயதுடைய ரஜினி நிற்பது போன்றும், இயற்கை சூழ்ந்த ஒரு வீட்டில் மேசையின் அடியில் ஏராளமான கத்திகள் உள்ள நிலையில் அதில் இருந்து ஒரு கத்தியை ரஜனி உருவுவது போன்றும் புரோமோ அமைந்துள்ளது.
இதன் மூலம் இப்படத்தில் தரமான ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைய இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தள்ளது. மேலும் நேற்று வெளியான ‘ஜெயிலர்’ டீசர் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இந்த டீசர் வெளியாகி உள்ள நிலையில் ரஜனி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.