ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் காரணமாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களை விடுவிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை முருகன், பேரறிவாளன், சாத்தன், நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகியோர் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில், பேரறிவாளன் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீதமுள்ளவர்களில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களையும் விடுதலை செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஏற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்தனர்.
அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்டட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி நளினி உட்பட ஆறுபேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் வரவேற்பு நல்கியுள்ளனர். இந்த தீர்ப்பு பற்றி பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, விசிக, பாமக போன்ற பல கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், விடுதலை ஆனவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருப்பர். இந்த தீர்ப்பை ஏற்கவோ மறுக்கவோ எதுவும் இல்லை என திருநாவுக்கரசர் தெரிவித்திருந்துள்ளார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.