தெலுங்கு நடிகர் ராம் சரணின் சட்டை மற்றும் வாட்ச் விலை இணையத்தில் வைரலாகிறது.

0
5

ராம் சரண்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா. இவர் தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இருப்பினும் இவர் நடித்த ‘மகதீரா’ திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் ‘மாவீரன்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு இங்கும் பெரும் வெற்றியடைந்தது. அதன் பிறகு ராம் சரண் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த படம் ஆர்ஆர்ஆர். இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. பல கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி பல படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது. மேலும் இப்படம் சினிமாவின் உயரிய விருதுகளான கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் போன்ற விருதுகளின் பட்டியலில் பரிந்துரையில் உள்ளது.

haran shirt and watch rate

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பின் ராம்சரண் தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி ராம்சரண் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் போட்டிருக்கும் வரிக்குதிரை டிசைன் சட்டையின் விலை 2 லட்சமாம். அதேபோல் அவர் அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை கேட்டால் தலை சுற்றிவிடுமாம். அவர் அணிந்திருக்கும் Richard Mille என்கிற பிராண்டட் வாட்ச்சின் விலை 2 கோடி. இதையறிந்து வாயடைத்துப்போன நெட்டிசன்கள் அவரிடம் வேறென்ன காஸ்ட்லி பொருட்கள் உள்ளது என்பதை வலைவீச தேட தொடங்கியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here