ரஞ்சி கோப்பை 2022: சச்சின் டெண்டுல்கர் 1988ம் ஆண்டு அறிமுகமான ரஞ்சி கோப்பையில் சதம் விளாசி ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார். அவரின் மகனும் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி சதம் விளாசி தனது தந்தையின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அர்ஜூன் டெண்டுல்கர் இதற்கு முன்னர் முப்பை அணியில் இருந்து வந்தார். கடந்த போட்டிகளில் இறுதி போட்டிக்கு மும்பை அணி தேர்வான போதும் கூட இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ப்ளேயிங் லெவனில் அவர் சேர்க்கவில்லை. இந்நிலையில், கோவா அணிக்கா தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.
மும்பை அணியை எதிர்கொள்வதும் மும்பை அணியில் விளையாடுவதும் மிகப் பெரிய வாய்ப்பாக கருதும் சூழலில் மும்பைக்கு எதிராக களம் இறங்கி விளையாட அர்ஜூன் விரும்புவதாக கூறப்பட்டது. மும்பை அணியை எதிர்கொண்டு நல்ல திறமைகளை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கே நேராக செல்ல முடியும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்து.

அதன் அடிப்படையிலேயே மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணியில் ரஞ்சி போட்டியில் களம் இறங்கி தன் முதல் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் இடதுகை பேட்டராகவும் இடதுகை பந்து வீச்சாளாராகவும் களத்தில் உள்ளார்.
கடந்த ஐபிஎல் போட்டியில் அர்ஜூன் முப்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகிறார். ஆனால், ப்ளேயிங் லெவனில் இல்லை. இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ரஞ்சி கோப்பைக்காக ராஜஸ்தானுக்கு எதிராக கோவா அணி சார்பாக விளையாடி வரும் அர்ஜூன் தனது முதல் சதத்தை 178 பந்துகளில் கடந்தார். இவர் 15 பவுன்டரி மற்றும் 2 சிக்சருடன் 113 ரன்களை பதிவு செய்தார்.
இவரது தந்தை சச்சின் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மாஸ்டர் பிளாஸ்டர் என்று கூறும் அளவிற்கு பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்றுள்ளதோது இந்திய அணிக்காக பலமுறை வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உள்ளார். சர்வதேச கிரி்கெட்டில் இவர் இதுவரை நூறுக்கு நூறு என்ற சதத்தை பதிவு செய்துள்ளார். உலக கிரிக்கெட் வீரர்களில் அதிக ரன்களை அடித்து முதல் இடத்தில் உள்ளார். இவர் இதுவரை விளையாடிய போட்டிகளில் 36,000 ரன்களை கடந்து முன்னிலையில் உள்ளார்.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: கண்ணீருடன் விடை பெற்ற ரொனால்டோ
தற்போது இவரை போலவே அவரது மகனும் இந்திய அணிக்காக பல விருதுகளையும் பல சாதனைகளையும் வருங்காலத்தில் பெற்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.