ஜப்பான் படத்தின் மூலம் மீண்டும் கார்த்தி ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா

0
3

ராஷ்மிகா மந்தனா: கார்த்தி அடுத்து நடிக்க உள்ள புதிய திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜிப்சி ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்க உள்ளார். இப்படம் சமூக பிரச்சினையை பேசும் படமாக உருவாகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. கார்த்தி ஏற்கனவே நடித்து வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

karthi in japan movie

ஜப்பான் திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் அவர் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜப்பான் படம் மூலம் இணைய உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கால்ஷீட் ஒத்து வந்தால் இதில் நடிப்பேன் என்று ராஷ்மிகா உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here