ராஷ்மிகா: புஷ்பா 2 படத்திலும் வாரிசு படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் எந்த ஒரு விஷயத்துக்கும் உடனடியாக ரியாக்ட் செய்து தனது உணர்வுகளை வெளிக்காட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது.
‘எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக இருப்பது எனக்கு பிடிக்கும். என்னை மிஸ் கூல் என்று அனைவரும் அழைப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் எனது உணர்வுகளை உடனடியாக வெளிப்படுத்த மாட்டேன். வீட்டிலும் அப்படித்தான், படப்பிடிப்பிலும் அப்படித்தான்.
வீட்டில் என்னை பார்த்து நீ வாய் திறக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. இன்னும் எவ்வளவு நேரம் அமைதியா இருப்பேன்னு அம்மா கேட்பாங்க. படப்பிடிப்பு தளத்தில் யூனிட்டில் உள்ளவர்கள் நீங்கள்தான் இது பற்றி பேச வேண்டும். ஆனால் நீங்கள் அமைதியாக பொறுமையாக இருக்கீங்க. எங்களால அந்த மாதிரி இருக்க முடியாது. நாங்க போய் கேட்கிறோம்னு சொல்வார்கள். சரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போய் கேளுங்கள். நான் கேட்க முடியாது என சொல்லிவிடுவேன். சந்தோஷத்தை மட்டுமே நான் உடனடியாக வெளிப்படுத்துவேன். மற்ற விஷயங்களை மனதிலேயே அடக்கிக் கொள்வேன்’. இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.