ராஷ்மிகா: ராஷ்மிகா நடித்த ஒரு இந்தி படம் தியேட்டரில் தோல்வி கண்டதால் மற்றொரு இந்தி படம் ஓடிடியில் வெளியாகிறது. ராஷ்மிகா நடித்த இந்தி படம் ‘குட் பை’. இது ராஷ்மிகா இந்தியில் நடிக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் ஒரே வாரத்தில் இப்படம் தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தியில் ராஷ்மிகா நடித்த முதல் படமே படுதோல்வி அடைந்ததால் அவர் விரக்தியில் இருக்கிறார்.
இந்நிலையில் இந்தியில் ராஷ்மிகா நடித்த இரண்டாவது படம் ‘மிஷன் மஜ்னு’. இதில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இந்த படம் இந்திய ராணுவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள கதையாகும். ராஷ்மிகாவின் முதல் படம் தியேட்டரகளில் வெளியாகி வெற்றி பெறாததால் அவரது இரண்டாவது படத்தை பாலிவுட்டில் இதன் தயாரிப்பாளர் எதிர்பார்த்த விலையை கொடுத்து வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக இல்லை. இதனால் இப்படத்தை ஓடிடியில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் ஜனவரி 18ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்காக நெட்பிளக்ஸ், அமேசான் ஆகிய ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.