IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகுகிறார் ரவீந்திர ஜடேஜா அடுத்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட மாட்டார் என தகவல்.
2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதன் முறையாக ரவீந்திர ஜடேஜா அணியின் கேப்டன் பொறுப்பில் அணியை வழி நடத்தி சென்றார். துணை கேப்டனாகவும் ஆலோசனை வழங்குபவராகவும் தோனி இருந்து வந்தார். இருப்பினும் நிறைய தோல்விகளை சந்தித்தது இறுதியாக ஓரு சில போட்டிகளுக்கு திரும்பவும் தோனியே கேப்டன் பதவிக்கு இறக்கப்பட்டார்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதே வேளையில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய சரிவினை சந்தித்தது. சென்னை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. அணியில் புதிய இளம் வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

இப்படி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதன் காரணமாக அவருக்கும், அந்த அணியின் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து ஜடேஜாவிற்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான மோதல் முற்றியதால் அவர் சமூக வலைதள பக்கத்தில் சென்னை அணியை பின்தொடர்வதை நிறுத்தினார். அதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பிரச்சனை தீவிரமடையவே தற்போது ஜடேஜா இந்த ஆண்டு சென்னை அணியில் இருந்து டிரேடிங் விண்டோ மூலம் வெளியேறுகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் தன்னை வாங்க விருப்பப்பட்டால் தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஜடேஜா முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை அணியில் ஜடேஜா விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.