காஞ்சிபுரம் ஸ்ரீபெரம்பதூரில் உள்ள குயின்ஸ்லேண்டால் ஆக்கிரமித்த 32 ஏக்கர் நிலத்தை மீட்டது இந்து சமயத் துறை.
காஞ்சிபுரம் பாப்பன்சத்திரம் பகுதியில் குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா உன்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும், “FREE BALL TOWER” எனும் விளையாட்டும் உண்டு. நீண்ட உயரத்திற்கு ராட்சத இரும்புத்தூண் அமைக்கப்பட்டு அதன் மத்தியில் இரும்பு தொட்டில் போல் ராட்டினம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் அமர்ந்தவுடன் மேலே சென்று, வேகமாக கீழே இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோப் கார், புட் கோர்ட், போட் ஹவுஸ்,நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களாக அமைத்து பயன்படுத்தி மக்களை மகிழ்ச்சியடைய செய்து வந்தது. இதற்கிடையில் குயின்ஸ்லாண்ட் நடத்தும் இடங்கள் அனைத்தும் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஓட்டல்ஸ் நிறுவனம், ‘குயின்ஸ்லேண்ட்’ என்ற பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சொகுசு விடுதியை நடத்தி வந்தது.
குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.கடந்த 1998ஆம் ஆண்டுடன் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், அந்த நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததையடுத்து, ரூ.2 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 748 இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் கடந்த 2013ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் தரப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஜமீன்தார்களாக வாழ்ந்தவர்கள் இந்த கோவில்களுக்கு பூஜைகள், முறைகள் செய்ய 177 ஏக்கர் இடத்தை 1884ஆம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளனர். அதனை நானும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆய்வு செய்தோம். இந்த இடத்தை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.
குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்றைய தினம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்றைய தினம் மீட்கப்பட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.