வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கியாது ரெட் ஜெயின்ட் மூவிஸ்.
மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இணையும் நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் மாநாடு படம் மாபெரும் வெற்றியை தந்தது.
அதையடுத்து, இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என சிம்பு நடிப்பில் இரு வெற்றி படங்களை தந்திருக்கிறார். மூன்றாவதாக இவர்களின் கூட்டனியில் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் நடிகர் சிம்புவின் ஜோடியாக சித்தி இதானி என்னும் புதுமுக நாயகியுடன் நடிக்கிறார். சிம்புவின் தாயாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையில் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த்தா நுனி ஓளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடவடைந்துள்ளது. நடிகர் சிம்புவின் தந்தை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் அவருடன் சிம்புவும் பயணித்துள்ளார். ஆதலால் அவர் வந்தவுடன் டப்பிங் செய்து முடிக்கப்படும் என தெரிகிறது.
இப்படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலிசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. அதே 15 ம் தேதி ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படமும் அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தமிழகத்தின் திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.