ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஐங்கரன்’ வெளியிடப்படும் தேதி மாற்றம் தமிழுகத் திரைத்துறையில் மிக முக்கியமானவர்களில் ஓருவராக திகழ்ந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். அவர் இசைத்துறை மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அழகப்பா கல்லூரியில் ஓரு கலை விழாவில் பங்கேற்றார். அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் ஓன்று நீ்ங்கள் திரைத்துறைக்கு வராமல் போயிரிந்தால் என்னவாகி இருப்பீர்கள் எனற கேள்வி. அதற்கு அவர் அளித்த பதில் திரைத்துறைக்கு வரமால் இருந்தால் நான் நல்ல கிரிக்கெட் வீரராக வந்திருப்பேன் என்றார்.
அவர் சிறு வயதில் கிரிக்கெட் மீது மோகம் எப்போதும் கிரிக்கெட் விளையாடி கொண்டே இருப்பேன் என்று கூறியிருந்தார்.

அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஐங்கரன்’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷின்நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐங்கரன்’. இந்த படத்தை ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார்.
பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் சில சிக்கல்களால் நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியிட முடியவில்லை.
சமீபத்தில் இப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படம் சொன்ன தேதியில் வெளியாகாது என்றும், அதற்கு பதிலாக மே 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று இப்படம் ஆஹா ஓடிடித்தளத்தில் மே மாத இறுதியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.