குடியரசு தினம்: நாட்டின் 74வது குடியரசு தின விழா கடந்த 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி த்ரெளபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு, பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் நடந்தன. இதைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சதுக்கத்தில் இன்று நடக்க உள்ளது.
இதில் ஆயுதப்படைகளி்ன் உச்சபட்ச தலைவரான ஜனாதிபதி த்ரெளபதி முர்மூ கலந்து கொள்வார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்பர். பாசறை திரும்பும் முப்படை வீரர்களும் 29 ராகங்களில் இசை வாத்த்தியங்களை இசைத்து அணி வகுத்து செல்வர். முதல் முறையாக வடக்கு மற்றும் தெற்கு பிளாக் பகுதியின் முகப்பில் 3டி அனாமார் பிக் புரொஜக்ஷனுக்கு (முப்பரிமாண பல கோண காட்சிப்படுத்துதல்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3,500 டிரோன்களுடன் நாட்டின் மிகப்பெரிய கண்கவர் டிரோன் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.