தமிழ்நாட்டில் NEET (National Eligibility cum Entrance Test) க்கு எதிர்ப்பு குரல் கொடுத்து சட்ட மசோதா நிறைவேற்றியது போல இப்போது CUET நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்து சட்ட மசோதா நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு. NCERT பாடத்திட்டத்தை பின்பற்றும் CUET போன்ற நுழைவு தேர்வுகள் மாநில வாரிய பள்ளி மாணவர்களை பாதிக்கும். தமிழகத்தில் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல தோன்றுவதற்கு வழி வகுக்கும்.
பல்கலைக் கழக மானியக்குழுவிலிருந்து UGC தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு வெடித்தது. UGC மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து UG சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு எனப்படும் வழியை அறிவித்தது. பழைய கட்ஆப் அடிப்படைகளை நீக்கி Common University Entrance Test அறிமுகப்படுத்தியது.
CUET எதிர்க்கும் காரணங்கள்
CUET 2022 விண்ணப்ப காலம் தொடங்கியவுடன் நுழைவுத் தேர்வின் அனைத்து நடவடிக்கையையும் எதிர்ப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் இந்த தேர்வு பின்னடைவு மற்றும் விரும்பதகாதது என்றும் வலியுருத்தியுள்ளார்.
ஸ்டாலின் தான் எழுதிய கடிதத்தில் இது மாநில வாரியான பள்ளி பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களை வெகுவாக பாதிக்கும். CUET என்பது NCERT பாடத்திட்டத்தை சார்ந்தது தமிழகத்தில் 80 சதவீதம் மாணவர்கள் மாநில கல்வி முறையில் படித்தவர்களை முற்றிலும் பாதிக்கும். இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களிடையே பெரும் ஏற்ற தாழ்வை ஏற்படுத்தும் எனவும் கடித்தில் கூறியிருக்கின்றார்.
பாடத்திட்ட பிரச்சனை
நாட்டில் உள்ள இளங்கலைப் படிப்புகளுக்கான ஒவ்வொரு முக்கிய நுழைவுத் தேர்வும் NCERT பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில வாரியங்களில் படித்த மாணவர்களி மத்திய அரசு அல்லாத பல்கலைக் கழகங்களும் பொது நுழைவுத் தேர்வுயை சேர்க்கைக்கான அளவுகோலாகப் பின்பற்றத் தொடங்கினால், காலப்போக்கில், வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட மாநிலப் பள்ளிகள் சிதைந்துவிடும்.