உலக கால்பந்து போட்டியான (FIFA WORLD CUP) இந்த வருடம் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியால் கத்தாருக்கும் தமிழகத்திகத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பால் வருவாய் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா நடத்தும் 22 வது கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 20ம் தேதி முதல் நடைபெற்று வரும் இப்போட்டிகள் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளால் தமிழகத்திற்கும் வருவாய் ஏற்பட்டுள்ளது.
உலக கால்பந்து போட்டிகள் நடந்து வரும் கத்தாரில் முட்டையின் தேவை வழக்கத்தை விட அதிகமாக தேவைப்படுவதால் எப்போதும் ஏற்றுமதியாகும் முட்டையின் எண்ணிக்கையை விட இந்த முறை அதிகரித்துள்ளது. மேலும், முட்டை ஏற்றுமதி செய்யும் துருக்கியில் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் போன்ற நாடுகள் நாமக்கல்லில் இருந்து அதிகளவில் முட்டைகளை வாங்க தொடங்கியுள்ளன. இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக ரஷ்யா உக்ரேன் போர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல, நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன் மற்றும் மாலத்தீவுக்கு மாதந்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த நாடுகளுக்கு 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, உலக கால்பந்து போட்டி நடைபெற்று வரும் கத்தாரில் வழக்கத்தை விட முட்டையின் தேவை அதிகரித்துள்ளாதால் நாமக்கலிருந்து 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உலக கால்பந்து போட்டிக்கு தேவையான பனியன் மற்றும் டிராக்சூட் ஆடை வகைகளை தமிழகத்தில் ஆடை தயாரிப்புக்கு பெயர் போன திருப்பூருக்கு ஆர்டர்கள் குவிந்தது பல ஆயிரம் ஆர்டர்கள் பெறப்பட்டு கத்தாருக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்: உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா
உலக கால்பந்து போட்டியை நடத்தும் கத்தார் நாட்டினால் தமிழத்திற்கு வணிக ரீதியாக வருவாய் கிடைத்து வருவது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமையாக உள்ளது.
இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.