குஜராத் தேர்தல்: ஜடேஜாவின் மனைவி ரிவபாமுன்னிலை பெற்று வருகிறார்

0
4

குஜராத் தேர்தல்: குஜராத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வருகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியான ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

ரவீந்தீர ஜடேஜா ஓரு இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். இவரது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் மன்னராக இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் பல தோல்விகளை தழுவியது அதுமட்டும் அல்லாது அவராலும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வந்தார்.

இதனால் தான் சென்னை அணியிலிருந்து விலகுவதாகவும் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். இறுதியாக தோனியின் குறுக்கீட்டால் மீண்டும் சென்னை அணிக்காக வருகிற போட்டியில் களம் காண உள்ளார். இந்நிலையில் டி20 உலக கோப்பை மற்றும் நியூசலாந்து தொடர் மற்றும் வங்கதேச தொடர்களை புறக்கணித்து வந்தார் காயம் காரணமாக என்று விளக்கமளித்தார் ஜடேஜா.

குஜராத் தேர்தல்: ஜடேஜாவின் மனைவி ரிவபாமுன்னிலை பெற்று வருகிறார்

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் தனது மனைவி பாஜக சார்பில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதனால் தான் இவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வரவில்லை என்ற புகாரும் மக்கள் மத்தியில் எழுந்தது. தீவிர தேர்தல் பரப்புரையில் இறங்கி மனைவிக்காக வாக்குகளை சேகரித்து வந்தார்.

குஜராத்தின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் ஜாம்நகர் தொகுதியின் சார்பில் களம் கண்டுள்ள ரிவபா ஜடேஜா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இவரது குடும்பமே அரசியல் குடும்பம் என்கின்றனர் குஜராத் மக்கள்.

இந்த நிலையில், குஜராத் முழுவதும் பாஜக 149 தொகுதிகளில் முதன்மை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: ஹூட் மேன் ரோஹூத் சர்மா அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here