அனைவரும் பார்க்க வேண்டிய படம் ராக்கெட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு.
‘நம் நாட்டின் விண்வெளி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுப்பட்ட பத்மபூஷன் நம்பி நாரயணனின் மிக தத்துரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குனராக தன் முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நீருபித்திருக்கிறார் மாதவன்’ என நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.
தமிழ்த் திரையுலகில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன் இன்றும் மேடி என்றால் அனைவருக்கும் தெரியும் அந்த அளவில் அப்படம் செம் ஹட். பின் தொடர்ந்து அலைபாயுதே, ஆயுத எழுத்து, டும் டும் டும் என பல படங்களில் நடித்தவர். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி தான். பெண்களின் ஹீரோவாகவும் வலம் வந்தவர்.

அமெரிக்காவில் நாசா வேலையை வேண்டாம் என புறம் தள்ளி தன் நாட்டிற்காக என் உழைப்பு இருக்க வேண்டும் என எண்ணி இஸ்ரோவில் விஞ்ஞானியாக நுழைந்தவரின் உண்மை கதை தான் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’.
ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்ட நம்பி நாரயணன் (மாதவன்), உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் தொடர்பான ஆராய்ச்சியை முடிக்கிறார். இதைதொடர்ந்து அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதைப் புறந்தள்ளி அவர் இந்தியா திரும்புகிறார்.
இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக அவர் ஆற்றும் பங்கு, அதையொட்டி நடக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகள், அதனால் ஏற்படும் பாதிப்பு என விரிகிறது ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தின் திரைக்கதை.
இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் பார்க்க வேண்டிய படம் மாதவன் இயக்கிய தன் முதல் படத்திலேயே அனுபவ இயக்குனரை போல செயல்பட்டுள்ளார் என பாரட்டியுள்ளார்.