36-வது பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம். இதற்கு முன்னர் இப்பதவியில் இருந்த கங்குலி விடைபெற்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் இன்று நடந்த ஆண்டு பொது கூட்டத்தில் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மற்றம் முன்னாள் பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி மீண்டும் இப்பதவியில் நீடிக்க திட்டமிட்டார். ஆனால், மறுக்கப்பட்டு ஐபிஎல் நிர்வாகத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டார்.
ஆனால், அதை மறுத்த கங்குலி இந்த பதவிக்கே தலைவராக நீடிக்கவே நினைத்தார். மறுக்கப்பட்டதால் ஐபிஎல் தலைவர் பதவியை உதறி தள்ளிவிட்டார் கங்குலி. தற்போது, புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவரான ரோஜர் பின்னி 1983ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்று இந்திய அணிக்கு கோப்பையை வென்று தந்தவர்களில் ஓருவர்.

கர்நாடகத்தை சேர்ந்த இவர் தற்போது அம்மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வந்தவர். 67 வயதான பின்னி இந்திய அணிக்காக 27 டெஸ்ட் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர். அவர் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
பொருளாளராக பாஜக எம்.எல்.ஏ ஆஷிஷ் ஷெலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலாளராக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய்ஷா அதே பதவியில் நீடிக்கின்றார்.
கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.