கண்ணீர் மல்க விடை பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவான் ரோஜர் பெடரர். லேவர் தொடருடன் விடை பெற போவதாக முன்னரே தெரிவித்த பெடரர் நேற்று நடந்த லேவர் தொடரில் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று டென்னிசிலிருந்து விடைபெற்றார்.
சிறு வயத்தில் பந்து பொறுக்கி போடும் நபராக டென்னிசில் காலடி வைத்தவர் தான் ரோஜர் பெடரர் என்ற மிகப் பெரும் தன் கனவு வாழ்க்கையான டென்னிஸில் ஈடுப்பட்டு பல சாதனைகளை செய்ய வேண்டும் என தன் கனவினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உலமே மெச்சும் அளவிற்கு விளையாடியவர் தான் பெடரர்.
இவர் 8 முறை விம்பிள்டென்னை வென்றவர் மேலும், 2018ல் ஆறுமுறை ஆஸ்திரேலிய பட்டங்களை வென்றவர். 5 முறை யுஎஸ் ஓபன் பட்டங்களையும் வென்றவர். அதில் என்ன சாதனை என்றால் இவை அனைத்தும் தொடர்ச்சியாக பெற பட்ட பட்டங்களாகும். ஓரு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில் ரோஜர் பெடரர் செப் 15 ல் அனைத்து வித டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்திருந்தார். இதை கண்ட ஸ்பெயின் நாட்டு வீரர் நடால் தன் டிவிட்டர் பக்கத்தில் இந்த தருணம் என் வாழ்நாளில் வரக் கூடாது என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: இந்தியாவிலேயே முதன் முறையாக உடலை அறுக்காமல் போஸ்ட்மார்ட்டம்
மேலும், ‘என் நண்பனும் வைரியுமான பிரிய ரோஜர் பெடரர், இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன். இந்த நாள் எனக்கும், விளையாட்டிற்கும் மிகுந்த சோகமான தினமாகும். இத்தனை ஆண்டுகளாக களத்திலும், களத்திற்கு வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டதில், மகிழ்ச்சியும் பெருமையும் என்பதைத் தாண்டி, அதனை எனக்கான மிகப்பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்” என்று ரபேல் நடால் தன் சமூக ஊடகப்பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் இறுதியாக களம் கண்ட பெடரர் மற்றும் நடால் இணைந்து விளையாடினர். இதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் ஆராவாரமும் அதிகரித்தது. எதிரணி இளம் ஜோடியான சோக் மற்றும் டியோபி வென்றது .இதனை அடுத்து ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் விலகினார்.
பெடரர் விலகுவதை தாங்கிக்கொள்ள முடியாத ரஃபேல் நடாலும் அவருக்கு அருகில் அமர்ந்து கதறி அழுதார். இதை பார்த்த ரசிகர்கள் நெகழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ரோஜர் ஃபெடரரை ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்கள் தங்களது தோளில் சுமந்து மைதானத்தில் வலம் வந்து அவருக்கு பிரியாவிடை அளித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.