Home விளையாட்டு ஹூட் மேன் ரோஹூத் சர்மா அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்

ஹூட் மேன் ரோஹூத் சர்மா அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்

0
4

ஹூட் மேன் ரோஹூத் சர்மா அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 500 சிக்சர்கள் அடித்து இந்திய வீர்ரகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி விராட் கோலி தலைமையிலான நடைபெற்ற போட்டிகளில் அதிக தோல்விகளை சந்திக்க நேரிட்டதாலும் கோலி தனது ஆட்டத்தை திறம்பட விளையாட முடியாததாலும் மனம் நொந்து கேப்டன் பதவியை துறந்தார். இதனை அடுத்து இந்திய அணியை வழிநடத்த ரோஹூத்திற்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வாங்கி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய அணிக்கும் வங்கதேச அணிக்கும் வங்கதேச மண்ணில் போட்டிகள் நடைபெற்று வந்தது. 3 ஓருநாள் போட்டி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் முதல் ஓருநாள் போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. 2வது போட்டியில் இந்திய வெல்லும் என்ற நோக்கில் தொடங்கிய இந்திய அணியின் பயணத்திற்கு முட்டுக் கட்டை போட்டது வங்கதேசம்.

ஹூட் மேன் ரோஹூத் சர்மா அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்

இந்திய கேப்டன் ரோஹூத் சர்மாவிற்கு பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்து வந்தார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 272 ரன்களை எட்ட இநதிய அணியினர் போராடி வந்த நிலையில் இறுதியாக களம் இறங்கி அதிரடி காட்டிய ரோஹூத் 28 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுன்டரி என 51 ரன்களை அடித்தார். இருப்பினும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்திய கேப்டன் அதிரடியால் வங்கதேச வீரர்கள் அதிர்ந்து போன நிலையும் ஏற்பட்டது. இப்போட்டியில் 5 சிக்சர்களை அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 500 சிக்சர்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹூத் சர்மா. அது போல, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் ரோகித் ஷர்மா உள்ளார். ஷாகின் அஃப்ரீடி 476 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளார். தல தோனி 359 சிக்சர்களுடன் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள்: INDVSBAN 2 ODI: போராடி தோற்ற இந்தியா தொடரையும் வென்றது வங்கதேசம்

ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும், டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும் ரோகித் ஷர்மா விளாசியுள்ளார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here