IND VS AUS T20: இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது டி20 தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு 2 காரணங்கள் ரோஹித் பேட்டி.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணிகள் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன் முதலாவது போட்டி நேற்று மொகாலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது.
டாசை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி இந்திய அணியினர் பேட்டிங் செய்ய தொடங்கினர். ரோஹித் அதிரடியாக ஆடி 21 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டாகினார். பின் இறங்கிய நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.
சூரியக்குமார் யாதவ் சிறிது நேரம் நின்று நிதானமாக கே.எல்.ராகுலுக்கு துணையாக இருந்து ரன்களை அடித்து வந்தார். ஸ்கை அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 46 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ராகுலும் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பவுலிங்கில் அவுட்டாகினார்.

அடுத்ததாக வந்த ஹர்த்திக் பாண்டியா மட்டும் நின்று ஆஸ்திரேலிய பந்துகளை நாலாபுறமும் வெலுத்து வாங்கி வெறும் 30 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். தினேஷ் கார்த்திக்கும் சொற்ப ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
ஆக்சர் பட்டேல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் சறிய ரன்களை எடுத்திருந்தனர் இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து அட்டமிழந்தது.
கடினமான இலக்காக கருதப்பட்ட ரன்களை ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ் மேன்கள் அதிரடியாக ஆடினர். முதலில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்து வந்த அவ்வணி வீர்ர்கள் இறுதியாக வேட்டின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. சிறப்பான விளையாடிய கீரின் 30 பந்துகளில் 61 ரன்களை குவித்து பந்துவீச்சில் ஓரு விக்கெட்டும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இந்த தோல்விக்கு மிக இரண்டு காரணங்கள் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டியளித்தார் என்னவென்றால், கடினமான இலக்கை வைத்த போதும் சரியாக பந்துவீச்சில் இந்திய அணியினர் கவனம் செலுத்த தவறிவிட்டனர் என்றும் சிரியான பீல்டிங் செய்யவில்லை என்றும் தவறை ஓப்புக் கொண்டு புலம்பினார.