மான்செஸ்டர் யூனிடட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ

0
13

மான்செஸ்டர் யூனிடட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ. கால்பந்து நாயகர்களாக விளங்கும் மெர்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் கால்பந்து போட்டிகளில் பல சாதனைகளை படைத்தவர்கள். இந்நிலையில், மெர்ஸி சவூதி அரேபியாவுடான போட்டியில் அதிர்ச்சி தோல்வி கொடுத்து அதிர்ச்சி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். 

இன்று மான்செஸ்டர் யூனிடட் கிளப்பிளிலிருந்து தனது ஓப்பந்தத்தை முடித்து கொண்டு வெளியேறி ரொனால்டோ பேரதிர்ச்சி அளித்துள்ளார். கால்பந்து உலகின் இரு ஜாம்பாவான்களின் இச்செயல்களால் உலக கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கிறிஸ்டினோ ரொனால்டோ இங்கிலீஸ் ப்ரிமியர் தொடரில் மான்செஸ்டர் யுனிடட் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் தனது மகளின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முடியாது என சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனை மான்செஸ்டர் யுனிடட் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மான்செஸ்டர் யூனிடட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ

இதனால் அந்த மான்செஸ்டர் கிளப்பின் மீது கோபம் அடைந்த ரொனால்டோ பலவாறு விமர்சனம் செய்தார். குறிப்பாக அந்த கிளப்பின் மோலாளரை நான் மதிப்பதே கிடையாது. அவர் மீது நான் மரியாதை வைத்ததில்லை என பல வகைகளில் விமர்சனம் செய்தார். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே விரிசல் எற்பட்டது.

இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியை விட்டு உடனே விலகுகிறார். இரு தரப்பினரும் இணைந்து எடுத்த முடிவு இது என்று குறிப்பிட்டுள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா சாதனை

இது குறித்து பேசிய ரொனால்டோ மான்செஸ்டர் யுனிடட் அணியிலிருந்து விலகி உள்ளேன். ஆனால், ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டுள்ளேன் என்றும் உங்கள் அன்புக்குரியவனாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார். மான்செஸ்டர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்திருக்கிறார்.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here