சென்னை மெரினா கடற்கரைப் பகுதிகளில் 2 ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.
தமிழகத்தின் தலைநகராக இருந்து வரும் சென்னை மாநகரின் முக்கிய இடங்களில் ஓன்றாகவும் உலக அளவில் மிக நீண்ட இரண்டாவது கடற்கரை என்ற பெயரை பெற்றுள்ள மெரினா கடற்கரையை அழுகுப்படுத்தவும் திட்டம். உலகத்தரம் வாய்ந்த இடமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கடைகளை ஓழுங்குப்படுத்திடவும் எவ்வகையிலும் வணிகர்கள் பாதிக்காத வகையிலும் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையை மாற்றுத்திறனாளிகள் சென்று காணும் வகையில் தமிழநாடு அரசு அவர்களுக்கென மரத்தினாலான பாதையை அமைத்து அவர்களின் கனவை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும் தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களும் தொழிலுக்காவும் வணிகத்திற்காகவும் சென்னை வருகின்றனர். இதனால் மக்கள் நெருக்கம் அதிகரத்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் சாலையை மட்டுமே நம்பி இருந்தால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பல வேலைகள் தடைப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டும் சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் மூலம் சென்னை கடற்கரைப் பகுதிகளில் 2 ரோப் கார் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இத்திட்டத்தை மத்திய அரசும் சென்னை மாநகராட்சியும் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி நகர்ப்புறங்களில் ரோப் கார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என 2022-2023-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன்படியே திட்டங்கள் தொடங்குவதற்கான முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதே போன்ற ரோப் கார் திட்டத்தை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்திரகாண்ட், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை 4.6 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள நம்ம சென்னை செல்பி பாயிண்ட் வரையிலும் என இரண்டு வழி தடத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தேசிய ரோப்வே வளர்ச்சி திட்டம் பருவதமாலா பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன கூட்டு முயற்சியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்: தனது பிறந்தநாளில் கற்றார் என்ற புதிய தளத்தை உருவாக்கிய இசைப்புயல்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.