ரயில்வேயில் குரூப் D CBT 1 தேர்வு 2022-க்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே ஓரு மிக பெரிய ஓன்றிய அரசின் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
RRB Group D CBT 1 Exam 2022: 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான RRB லெவல் 1 அறிவிப்பு மார்ச் 2019 இல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
அறிவிக்கப்பட்ட குரூப் டி பதவிகளுக்கான மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1,03,769. 7வது CPC மேட்ரிக்ஸ் தேர்வுகளில் நிலை 1 பதவிகளுக்கான RRB CBT கட்டம் 1 ஆகஸ்ட் 17, 2022 முதல் தொடங்கும்.
RRB Level 1 notification 2022: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), குரூப் D CBT 1 தேர்வு 2022-க்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை இப்போது பல்வேறு பிராந்திய RRB இணையதளங்களில் கிடைக்கின்றன.
இந்த தேதிகள் 7-வது CPC மேட்ரிக்ஸில் நிலை 1 பதவிகளுக்கான RRB CBT 1 ஆம் கட்டத்திற்கானவை என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும். தேர்வு தேதிகள் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன – rrbdg.gov.in, rrbmumbai.gov.in.

RRB குரூப் D CBT 1 தேர்வு 2022 அட்டவணையில் இந்த கட்ட 1 தேர்வு ஆகஸ்ட் 17 முதல் 25, 2022 வரை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நடைபெறும் என்று குறிப்பிடுகிறது. இந்தத் தேர்வின் சரியான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை RRB குரூப் D அட்மிட் கார்டில் குறிப்பிடப்படும், அது பின்னர் வெளியிடப்படும்.