ஜேம்ஸ் கேமரூன். சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இரண்டு முறை பார்த்துள்ளதாக ராஜமவுலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ராஜமவுலி சமீபத்தில் அமெரிக்காவில் சந்தித்தனர்.
இதையடுத்து ராஜமவுலி டிவிட்டரில், ‘ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்துள்ளார். படவும் விரும்பியதால் தனது மனைவி சுசிக்கு பரிந்துரைத்து மீண்டும் ஒருமுறை படத்தை பார்த்துள்ளார். படம் குறித்து அவர் பத்து நிமிடம் எங்களுடன் பகுத்தாய்வு செய்ததை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. அவர் சொன்னது போல் நான் உலகத்தின் உச்சியில் இருக்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை ராஜமவுலி சந்தித்து பேசினார். இந்நிலையில் அவதார் படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் பாராட்டு இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.