ஆர்ஆர்ஆர்: உலகின் சிறந்த திரைப்பட விழாவாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல இந்திய திரைப்படங்கள் பொது பிரிவில் போட்டியிட்டது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது இறுதி தேர்வு பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில் சமீபத்தில் கோல்டன் குளோப் விருது பெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ‘பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ என்ற பிரிவில் தேர்வாகி உள்ளது.
அதேபோல் சிறந்த டாக்குமென்ட்ரி பிரிவில் போட்டியிட்ட ‘ஆல்தட் ப்ரீத்தஸ்’ என்ற படமும், சிறந்த டாக்குமென்ட்ரி குறும்பட பிரிவில் போட்டியிட்ட ‘தி எலிபென்ட் விஸ்பரஸ்’ என்ற படமும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, தற்போது ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியலில் ‘பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ பிரிவில் இடம் பெற்றிருப்பது இந்தியர்கள் அனைவரையும் பெருமைப் படுத்தியிருக்கிறது. மேலும் இப்படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.