திருப்பதிக்கு இஸ்லாமியர் வழங்கிய ரூ1.2 கோடி நன்கொடை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தை சார்ந்த இஸ்லாமியர் 1 கோடியே 2 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவர் சென்னையை சேர்ந்த சுபிதா பானு, அப்துல் கனி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்துக்களில் வைணவத்தலங்களில் சிறப்பு மிக்கதாக உள்ளது திருமலை திருப்பதி அங்கு குடி கொண்டிருக்ம் ஏழுமலையானை தரிசிக்க நாட்டில் உள்ள அனைவரும் வந்து வணங்குவது உண்டு.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்குகிறது. அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக அன்னதானம் வழங்வது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் அனைவரும் விரதம் இருந்து அதாவது இந்த மாதம் முழுவதும் அசைவம் உண்ணாது காய்கறிகளை மட்டுமே சமைத்து சாப்பிடுவது மரபாக மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பழமொழி. இந்த பழமொழிப்படி பக்தர்களுக்கு பலன் கொடுத்து வருகிறார் ஏழுமலையான். இந்த பிரசித்தி பெற்ற தலத்தில் சாதி, மதம் பாராமல் அனைவரும் வணங்கி வருகின்றனர். அதைபேல இன்று இஸ்லாமிய குடும்பம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து அந்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.2 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சி எம்மதத்தினரும் இறைவனிடம் சமம் என்பதை வெளிப்படுத்துவதாக காணப்படுகிறது.