ரசிகர்களின் வரவேற்பை பெறும் ‘வதந்தி’ வெப் சீரியஸ் அமேசான் ஓடிடி தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகியது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் SJ SURIYA தொடர்ந்து கதாநாயகன் படத்தை காட்டிலும் வில்லான் கதாபாத்திரம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பல முன்னணி நடிகர்களுக்கு எதிரியாக நடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் மாநாடு, டான் திரைப்படங்கள் இவருக்கு ஏற்றத்தை தந்தது.
இவரது சிறப்பான நடிப்பு இவரது பேச்சு உடல் மொழி என அனைத்தையும் ரசிகர்கள் ரசிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வதந்தி என்ற வெப் சீரியசில் நடித்து ரசிகர்களின் ஆராவாரத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறார்.

ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இந்த தொடர், வெலோனி என்ற 20 வயது பெண்ணின் மரணமும், அதையொட்டி பரவும் வதந்திகளும் என ஒரு திரில்லர் சீரிஸாக உருவாகியுள்ளது. ஜப்பானிய கிளாசிக் படமான ரஷோமான் பாணியில் ஒரு சம்பவத்தைப் பலரது பார்வைகளை சொல்லும் கதைக்களமாக உருவாகியுள்ள இந்த தொடர் ரசிகர்களால் பார்க்கப்பட்டு பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். மேலும், இப்படத்தை விக்ரம் வேதா, லீலை, கொலைக்காரன் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்திரி தயாரித்து இருக்கிறார். 8 எப்பி சோடுகளை கொண்டு இருக்கிறது இந்த திரைப்படம்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா (அறிமுகம்), நாசர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் முழக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சமூகத்திற்கு நல்ல கருத்து சொல்லும் படமாகவும் உள்ளது.
இதையும் படியுங்கள்: வணங்கான் படத்திலிருந்து சூர்யா திடீர் விலகல் – இயக்குனர் பாலா அறிக்கை
கன்னியாக்குமரி வட்டார வழக்கை பிரதிபலிக்கும் வகையிலும் எஸ்ஜேசூர்யா காவல் துறை அதிகாரியாக வந்து வழக்குகளை கண்டுபிடிப்பதும் என சுவாரசியமாக அமைந்துள்ளது. இந்த படம் ரசிகர்களின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.