ரஷ்யா: சைப்பிரியா பகுதியில் உறைந்த ஏரியில் புதையுண்டிருந்த 48,500 வருடங்கள் பழைமாயான ஜாம்பி வைரஸூக்கு உயிர் கொடுத்துள்ளனர் ப்ரென்ஞ் ஆராய்ச்சியாளர்கள். ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்படுத்தினால் உலகில் மற்றுமொரு பேரழிவு ஏற்படுமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருவேறு இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆய்வுகளை ஆய்வு செய்ததில் வைரஸ்கள் இன்னும் கூட மனிதர்களை தாக்கும் குணம் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் 13 வகையான நோய் கிருமிகளுக்கு புத்துயிர் கொடுத்து வகைப்படுத்தியுள்ளனர்.
அவை “ஜாம்பி வைரஸ்கள்” என்று அழைக்கப்பட்டன, மேலும் அவை உறைந்த நிலத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக சிக்கியிருந்தாலும் அவை தொற்றுநோயாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கனடாவில் உள்ள மான்கள் அரிய நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன. Chronic Wasting Disease (CWD) என்று சொல்லப்படக்கூடிய இந்நோய், மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பை பாதிக்கக்கூடியது. இதனை zombie deer disease என்றும் சொல்கின்றனர். ஏனெனில் இந்நோய்த் தொற்றினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுவதை குறிப்பிட்டிருந்தனர்.
உமிழ்நீரும், சிறுநீரும் அதிகளவில் சுரந்து கொண்டே இருக்கும், மூளை, தன் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரண செயல்களைச் செய்யும் என கனடாவின் உணவு ஆய்வு நிறுவனம் நோய்த் தொற்றின் அறிகுறிகளைத் தெரிவித்திருந்தது.
இந்நோய் கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற பகுதிகளில் உள்ள மான்களை பாதித்து வருகிறது. மரை மான், கலை மான், சதுப்புநில மான், கட மான் போன்ற மான் வகைகளை பாதிக்கக்கூடிய இந்நோய், மனிதரிலும் பரவ வாய்ப்புண்டு என்று அன்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: தைராய்டு பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது
இந்த வைரஸை பற்றிய திரைப்படம் கூட தமிழில் வெளியாகி இருந்தது. திரைப்படத்தில் ஓர் கற்பனை உயிரினமாக காட்டப்பட்டிருக்கும் இறந்த உயிரினத்திலிருந்து இந்த வைரஸ் உயிரித்தெழுந்து வருவது போல திரைப்படம் அமைக்கப்பட்டிருக்கும் இவை இயற்கைக்கு எதிரானதாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஜாம்பி என்ற வைரஸ் காணப்படுவதும் அதை உயிர்த்தெழ செய்வதுமாக ஆய்வாளர்கள் செய்து வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.