சபரிமலை: ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதி

0
13

சபரிமலை: கார்த்திகை மாதம் தொடங்கினாலே ஐயப்ப பக்தர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கிடும் ஐயனை காண பக்தர்கள் அலை கடலென கூடி மாலை அணிந்து விரதம் இருந்து சபரிவாசனை காண சபரிமலைக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.

சபரிமலை சாஸ்தாவின் கோவில் இன்று மாலை திறக்கப்பட்டது. இன்று 10.30 மணிக்கு சாத்தப்படும். மண்டல பூஜையினை முன்னிட்டு திறக்கப்படும் கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுனார். அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்று கொள்கிறார்கள்.

நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல்வழக்கமான பூஜைகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில்மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில்நடைபெறும். அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலை: ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதி

நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.

கொரோனா தொற்று காரணமாக பலவித கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோவில் தற்போது எவ்வித தொற்று கட்டுபாடுகள் இன்றி இந்த வருடம் பக்தர்கள் எளிய முறையில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 24 மணிநேரமும் அரசு மருத்துவமனை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here