சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்தது. ஹரிவாரசனம் பாடி நடை அடைப்பு.

0
5

ஐயப்பன்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் மட்டும் 30 லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு முன்னோடியாக தங்க அங்கி ஊர்வலம் நடந்தது. மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பத்து நந்திட்டா ஆறுமுகசாமி கோயிலில் இருந்து கடந்த 23ம் தேதி புறப்பட்டது. இதையடுத்து 26ம் தேதி சபரிமலை வந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மறுநாள் 27ம் தேதியான நேற்று பிற்பகல் 12.30 மணிக்கும் 1.00 மணிக்கும் இடையே மீன ராசியில் உள்ள சுபமுகூர்த்தத்தில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை நிறைவடைந்தது.

sabarimalai iyappan temple closed after harivarashanam song

இதை தொடர்நது மாலை 5 மணி முதல் தந்தரி கண்டரரூ ராஜூவரு தலைமையில் வழக்கமான பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து நடை அடைப்பிற்கு முந்தைய அபிஷேகங்கள், சடங்குகள் நடந்தன. தொடர்ந்து சங்கு இசை முழங்க, நம்பூதிரிகள் ஹரிவராசனம் பாட 42 நாட்கள் மண்டல பூஜைக்காலம் முடிந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here