மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்கை வரலாறு

0
5

மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்கை வரலாறு. இவரின் சாதனையை இனி ஓருவர் சாதிப்பது மிகவும் கடினம் என்று எண்ணுகின்ற அளவுக்கு தன் திறமையால் உயர்ந்தவர். இந்திய அணியின் நட்சத்திர வீரராக செயல்பட்டவர் சச்சின் டெண்டுல்கர் இவரின் வாழ்கை வரலாற்றை இப்பதிவில் காணலாம்.

பிறந்த வருடம்: 1973

தந்தை பெயர்: ரமேஷ் டெண்டுல்கர்

தாய் பெயர்: ரஜினி

பாட்டியின் பெயர்: லட்சுமிபாய்

உடன் பிறந்தவர்கள்: இரண்டு சகோதரர்கள், ஓரு சகோதரியும்

மனைவியின் பெயர்: அஞ்சலி மேத்தா

மகள் பெயர்: சாரா

மகன் பெயர்: அர்ஜின் 

இதையும் படியுங்கள்: சச்சின் டெண்டுல்கரின் பேக் டைரைவை டிரன்டிங் செய்து வருகின்றனர் இணையவாசிகள்

மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்கை வரலாறு

பள்ளி பருவம்:

சச்சின் டெண்டுல்கரின் தந்தை மராத்திய பேராசிரியர், தாயார் ரஜினி எல்.ஐ.சி முகவர் இருவரும் வேலைக்கு செல்லவே தனது பாட்டி லட்சுமிபாயின் அரவனைப்பில் 11 ஆண்டுகள் வரை  வாழ்ந்து வந்தார். அவர் ஓரு சுட்டி குழந்தையாகவும் குறும்பு பிள்ளாயாகவும் இருந்து வளர்ந்து வந்தவர். எப்போதும் துறுதுறுவென இருந்து வருபவர்.

சச்சினின் குறும்பு தனத்தை வேறு எதிலாவது திருப்ப நினைத்து அவரது தந்தை கிரிக்கெட் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டார். பல பிரபல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சீவாஜி பூங்காவில் அவருக்கான பயிற்சி நடைபெற்றது. அதுவரை கிரிக்கெட் என்றால் என்ன என்று கூட தெரியாது இருந்தவர் தான் சச்சின் டெண்டுல்கர். ஆனால், அதில் சிறிதும் தயக்கம் இன்றி எளிதாக பயிற்சி பெற்று விளங்கினார். அதற்காக சரமம் ஏதும் இல்லாமல் பயிற்சியை பெற்றார்.

சச்சினின் முதல் கிரிக்கெட் போட்டி:

கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்கிய சச்சினுக்கு படிப்பு இரண்டாம் பட்சமாக ஆனது. சச்சினுடைய ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரது பெற்றோர் அவரை கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சாரதாஸ்ரமம் என்ற ஆங்கில பள்ளியில் சேர்த்தனர்.

1984-ல் கோஜாகான் உயர்நிலைப் பள்ளிக்கு எதிராய் தனது பதினொன்றரை வயதில் விளையாடியதே சச்சினின் முதல் கிரிக்கெட் பந்தயமாகும்.

ரஞ்சி கோப்பைக்கு தேர்வு:

இதற்குமுன் எவரும் தேர்ந்தெடுக்கப்படாத பதினான்கரை வயது நிரம்பியவரை ரஞ்சி கோப்பைக்கு முதல் ஆளாக தேர்வானார். 1988-ல் சச்சின் ஸ்டார் கிரிக்கெட் க்ளப்புடன் இங்கிலாந்தில் ஆடச் சென்றார். அதுவே அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணம். அதே ஆண்டில் குஜராத்திற்கு எதிராக ரஞ்சித் போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் இந்தியா சார்பில் இவர் தன் முதல் சதத்தை பதிவு செய்து தனது பதினைந்தாவது வயதில் இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

1989 நவம்பர் 15-ல் கராச்சி டெஸ்ட்டில் கலந்து கொண்டபோது சச்சினுக்கு வயது 16. அந்த ஆட்டம் ‘ட்ரா’வில் முடிந்தது. அதுவே இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியுறாமல் திரும்பிய முதல் போட்டியாக பார்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் சச்சின் தான்.

அதன்பின் நடந்த இங்கிலாந்து பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்ததுடன் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார். தன் 16 வயதிலேயே டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டு சதம் விளாசியது அனைவரின் கவனத்தையும் திருப்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து 1988 ல் இலங்கை அணியை தோற்கடித்தது. இந்திய அணி இங்கிலாந்து அணியை தோற்கடிக்கவும் மிகவும் முதன்மை கதாநாயகனாக இருந்தவர் சச்சின் என்று அனைவரும் கொண்டாடினர்.

திருமண வாழ்க்கை:

1995 ஆம் ஆண்டு மே மாதம் 25ம் தேதியில் அஞ்சலி மேத்தா என்ற குழந்தை நல மருத்துவரை மணந்தார். சச்சினை விட ஆறு வயது மூத்தவர் அஞ்சலி இருந்தும் அவரின் மனம் நிறைந்த காதலினால் அவரை திருமணம் செய்து கொண்டார். அஞ்சலிக்கு சச்சினை மிகவும் பிடிக்கும் அது மட்டும் அல்லாமல் தன் காதலை எப்படி அவரிடம் சொல்வது என்று மிகவும் பயத்துடன் இருந்தார். ஓரு சமயம் தன் காதலை சொல்லி சச்சினிடம் தன் காதலுக்கு பச்சை கொடி பெற்றார்.

சச்சினை நான் முதன் முறையாக பார்த்த போது அவருக்கு வயது 17. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது எனது தாயை அழைத்து வர விமானநிலையத்திற்கு வந்தேன். அப்போது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தோம். அவரை பார்த்த தருணம் நான், சச்சினை திருமணம் செய்ய விரும்பினேன்.

ஓரு காலகட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்படவே அவருடன் பேச மிகவும் சிரமப்பட்டார். மொபைல் போன்கள் போன்ற ஆன்லைன்கள் இல்லாத காலம் அப்போது பல மயில் தூரம் கடந்து தொலைபேசியில் உரையாடி உள்ளனர். பலமுறை கடிதம் மூலமும் பேசியுள்ளனர். இப்படியாக கடந்து வந்த காதலை திருமண வாழ்கை அவர்களை ஓன்றினைத்தது.

தற்போது, இவர்களின் மகன் அர்ஜின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றார். மகள் சாரா லண்டனில் தனது உயர்படிப்பை தொடர்ந்து வருகின்றார்.

உலககோப்பை போட்டிகளில் சச்சின்:

1992 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அதிரடி பேட்ஸ்மேனாகவும் ஜொலித்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இவரின் ஆட்டத்திலிருந்து தான் கிரிக்கெட் விளையாட்டு மிக பிரபலம் அடைந்தது. ரசிகர்கள் இவர் மைதானத்திற்கு வந்தாலே சச்சின் சச்சின் என்று ஆராவாரம் செய்து வரவேற்பார்கள் அந்த அளவிற்கு எதிர் அணியினரின் பந்துவீ்ச்சுகளை சிதறடிப்பார்.

1993ல் அசாரூதின் தலைமையிலான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். பின்னர், இந்திய அணியின் தலைமை கேப்டனாகவும் விளங்கி பல வெற்றிகளை பெற்று இந்திய அணியின் பெருமைக்கு துணை நின்றார்.

தந்தை மரணம்:

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணியுடனான போட்டியின் போது தீடீரென தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்து இந்தியா திரும்பினார். அப்போது அப்போட்டியி்ல இந்தியா தோல்வியுற்றது. பின்னர், தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் முடித்துக் கொண்டு திரும்பவும் கென்யாவுடனான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் சதம் விளாசினார். தந்தையை இழந்த சோகத்திலும் கிரிக்கெட் மீதும் இந்தியா மீதும் அவர் வைத்திருந்த அன்பு போற்றுதற்குரியது.

டெஸ்ட் போட்டிகள்:

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்கள் அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 248 ரன்கள் எடுத்துள்ளார். 51 சதமும், 68 அரைசதமும், 6 முறை இருநூறு ரன்கள் என சாதனை செய்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் பயணத்தை தொடங்கிய சச்சின் 2013 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் எதிரான கடைசி டெஸ்ட் போட்டி விளையாடினார்.

ஓருநாள் போட்டிகள்:

463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18426 ரன்கள் அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார். 49 சதமும், 96 அரைசதமும், ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் சச்சின். (2010 பிப்ரவரி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டி) என சாதனைகளை செய்துள்ளார். அதேபோல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 200 விக்கெட்டும் எடுத்துள்ளார். இரண்டு முறை ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளார்.

1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியின் பயணத்தை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், 2012-ம் ஆண்டு அதே பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார்.

டி20 போட்டி:

டி-20 போட்டியை பொருத்த வரை ஒரே ஒரு போட்டி தான் விளையாடி உள்ளார். அது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் நாள் மும்பை தி வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் ஆடினார். ஒரு டி-20 போட்டியில் விளையாடி 10 ரன்களை எடுத்துள்ளார். ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள்:

2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற IPL தொடரில் பங்கேற்றார். 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2334 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும், 13 அறைசதமும் அடித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்துள்ளார்.

சச்சினின் சாதனைகள்:

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் எடுத்த ரன்கள் 34357, சதங்கள் 100. டெஸ்ட் வரலாற்றில் சச்சின் அதிகப்பட்ச ரன்கள் 15921, அதிகப்பட்ச சதங்கள் 51. ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த ஒரே கிரிக்கெட் பேட்ஸ்மேன் சச்சின் ஆவார். இதுவரையில் இச்சாதனையை எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டவில்லை. 1997, 1999, 2001, 2002, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் 1000 ரன்களுக்கும் மேலாக சச்சின் ஸ்கோர் செய்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் அதிகப்பட்ச ரன்கள் 18426. சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான மூன்றாவது இளம் வயது (16 வயதில் )வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் சச்சின். மிகவும் இள வயதில் டெஸ்ட் சதம் அடித்த மூன்றாவது இளம் வீரரும் சச்சின்.

ஒரு தொடக்க ஆட்ட வீரராக சச்சினின் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அவர் ஸ்கோர் செய்த அதிகப்பட்ச ரன்கள் 15310. டெண்டுல்கர் விளையாடி சதம் அடித்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 78.43 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டிகளில் சச்சின் அதிகப்பட்சமாக 49 சதங்கள் அடித்துள்ளார்.

தற்போது, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெற்று வந்தவர் லெஜென்ட்ஸ் என்ற கிரிக்கெட்டிலும் மாஸ்டர் பிளாஸ்டர் பங்கு பெற்று தனது திறமையை வெளிபடுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றார்.

இப்படி அனைவரும் வியந்து பார்க்கும் சாதனைகள் பலவற்றை செய்த லிட்டில் மாஸ்டர் என்றும் மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என்றும் ரசிகர்கள் இவரை அழைப்பர். இவருக்கு இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது அளித்து அவரை கௌரவித்தது. மேலும், பாரத ரத்னா பெறும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் பெற்றார்.

இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், உடல்நலம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here