சாய் பல்லவி: தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி பாலிவுட்டில் நடிக்க வைக்க முயற்சி நடிந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் இந்தியில் ராமாயணம் கதையை படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக ஹிரித்திக் ரோஷனும் நடிக்க இருக்கிறார்கள். பான் இந்தியா படமாக இது உருவாக இருக்கிறது.
இதில் சீதையாக நடிக்க தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீதை கேரக்டருக்கு சாய் பல்லவி சரியாக பொருந்துவார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சாய் பல்லவியிடம் தயாரிப்பு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இந்தி படங்களில் கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள் என்பதல்தான் சாய் பல்லவி பாலிவுட் வாய்ப்புகளை மறுத்து வந்தார். ஆனால் சீதை கேரக்டர் என்றால் அவருக்கு நடிக்க ஆட்சேபணை கிடையாது. அதே சமயம் முழு ஸ்கிரிப்ட் படித்த பிறகே இதில் நடிப்பது பற்றியும் தனது கால்ஷீட் பற்றியும் அவர் முடிவு செய்வார் என சாய் பல்லவி தரப்பு தெரிவித்துள்ளது.