ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாகும் சைப் அலிகான்

0
8

சைப் அலிகான்: பிரபல தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். இப்படத்தில் அவரும், ராம்சரணும் ஆடிய ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அது மட்டுமின்றி சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘ஆஸ்கர்’ விருதினை இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் தட்டி சென்றது. இப்பாடல் மூலம் உலக பிரபலமடைந்துள்ள ஜூனியர் என்டிஆர் அடுத்து நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகின்றன.

saif ali khan to play villan role in junior ntr movie

இவர் நடிக்கும் அடுத்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ஜூனியர் என்டிஆரின் 30வது படமான இதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடிக்க இருக்கிறார். வரும் 30ம் தேதி இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்காக சாபு சிரில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்துள்ளார். ஏற்கனவே ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாசுக்கு வில்லனாக சைப் அலிகான் நடித்து வருகிறார். அதில் பிரபாஸ் ராமராகவும், சைப் அலிகான் ராவணனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here