கீர்த்தி சுரேஷ் பட போஸ்டரை வெளியிட்ட நடிகை சமந்தா

0
10

கீர்த்தி சுரேஷ்: கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’, ‘வாஷி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாரட்டப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்திலும், தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘மாமன்னன்’ படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவரது நடிப்பில் இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.

samnatha launches the keerthi suresh's revolver rita first poster

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ரிவால்வர் ரீடா’. இயக்குனர் சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸடுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் இரண்டு கைகளிலும் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருப்பது போன்ற கார்ட்டூன் உருவமைப்பில் போஸ்டர் அமைந்துள்ளது. கீர்த்தி சுரேஷின் இந்த முதல் போஸ்டரை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here