‘Get Well Soon’ என்று சமந்தாவின் ரசிகர்கள் நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்

0
4

‘Get Well Soon’ என்று சமந்தாவின் ரசிகர்கள் நம்பிக்கை ஊட்டி வருகின்றனர். ஏனெனில் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை தன் டிவிட்டரில் டிரிப்ஸ் ஏறும் புகைப்படத்தை பதிவிட்டு காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருபவர். தற்போது, இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பட வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இதுதவிர இந்தியில் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதில் யசோதா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று நவம்பர் 11 ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார்.

‘Get Well Soon’ என்று சமந்தாவின் ரசிகர்கள் நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா சில நாட்களாக வரவில்லை. என்ன காரணம் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு டப்பிங் பேசுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: காந்தாரா படத்தில் இடம் பெற்ற வராஹ ரூபம் என்ற பாடலுக்கு தடை

மேலும், அந்தப் பதிவில் “யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததை விட அதிக நாள் ஆகிறது.

விரைவில் புதிய உற்சாகத்துடன் பணியாற்ற வருவேன் இதுவும் கடந்து போகும் என உருக்கமாக தெரிவித்திருந்தார்”. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் டிவிட்டரில் Get Well Soon என டிரென்டிங் செய்து வருகின்றனர்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here