சமந்தா:இரட்டை இயக்குனர்களான ஹரீஷ் கல்யாண்-ஹரி சங்கர் இயக்கியுள்ள திரைப்படம் ‘யசோதா’. இதில் சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். வாடகைத் தாய் முறையை பயன்படுத்தி ஏழைப் பெண்கள் ஏமாற்றப்படுவதும், அதை வைத்து நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிப்பதுமே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது. மிகவும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் இப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் 6.34 கோடி ரூபாய் வசூலித்தது. இப்படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் உன்னி முகுந்தன், முரளி சர்மா, சம்பத் ராஜ், மாதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படப்பிடிப்பு முடிந்த சில நாட்களிலேயே சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.