சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 6 ல் நடைபெறுகிறது

0
10

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 6 ல் நடைபெறுகிறது. மாரி என்றால் மழை என்பது பொருள். மாரியாய் வந்து பக்தர்களின் குறைகளைப் போக்கும் தாய் சமயபுரத்தில் குடிக்கொண்டிருக்கும் மாரியம்மன்.

அம்மன் தலங்களில் இந்த சமயபுர மாரியம்மன் பக்தர்களால் மிகவும் சிறப்புடையதாக பார்க்கப்படுகிறது. கண்களில் ஏற்படும் நோய்களை களையும் அம்மனாக பக்தர்கள் வணங்கி வழிப்பட்டு உண்டியலில் காணிக்கையாக கண் போன்ற அமைக்கப்பட்ட தகட்டினை செலுத்துவர். அப்படி செய்தால் கண் பிரச்சனைகளில் இருந்து காப்பாள் மாரியம்மன் என்பது இக்கோவிலின் ஐதிகம்.

வேப்பிலையில் ஆடை செய்து அம்மனை வணங்கியும் அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் தன் நேர்த்திக் கடனை செலுத்துவர். இக்கோவிலின் தலவிருட்சமாக வேப்ப மரம் காணப்படுகிறது.

சித்திரை மாதத்தில் நடைப்பெறும் தேர் திருவிழாவும் மாசி மாதத்தில் நடைப்பெறும் பூச்சொறிதல் விழாவும் சிறப்புக்குரிய திருவிழாவாகும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 6 ல் நடைபெறுகிறது

இதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரங்கள் உள்ளது. அவற்றிற்கு கட்டுமானப் பணிகள் முடிவடைந்து வண்ணம் பூசும் பணிகள் தொடர்நது நடைப் பெற்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஜூலை 6 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்தார் அதை தொடர்ந்து விறுவிறுப்பாக வேலைகள் அனைத்தும் நடைப்பெற்று வருகின்றன.

இதன் ஓரு பகுதியாக ஓமகுண்டம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூரில் கும்பாபிஷேகம் தமிழில் நடைப்பெற்றது அதுபோலவே இங்கும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்கிளில் இருந்தும் பக்தர்கள் வந்து மாரியம்மனை வழிப்பட்டு செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here