இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீராங்கனைக்கு ஓரே மாதிரியான சம்பளம்

0
24

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஓரே மாதிரியான சம்பளம் வழங்க இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உத்தரவு.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஓரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெறும் வீரர், வீராங்கனைக்கு ரூ15 லட்சமும், ஓருநாள் போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கு ரூ 6 லட்சமும், டி20 போட்டிகளில் பங்கு பெறும் வீரர் வீராங்கனைக்கு ரூ 3 லட்சமும் ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாலின பாகுப்பாடின் இன்றி அனைவருக்கும் ஓரே சம்பளம் என்பதை நிர்ணயம் செய்து அறிவிப்பை தன் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.

உலக விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடத்தை பெறுவது கால்பந்து போட்டிகள் அடுத்தப்படியாக கிரிக்கெட் போட்டிகள் இவை இரண்டும் உலக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இதனால் விளையாடுபவர்களின் மதிப்பும் அதிகரிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீராங்கனைக்கு ஓரே மாதிரியான சம்பளம்

கிரிக்கெட் போட்டிகளில் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்து கொண்டு தன் திறமையை நிலை நிறுத்தி வென்று வருகின்றார்கள் என்றால் மிகையாகாது. இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கே மிக மிக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகின்றது. இதனை போக்கும் வகையில் இன்று ஆண்கள் கிரிக்கெட் அணியினர் ஊதியத்தை போல பெண்கள் கிரிக்கெட் அணியினருக்கும் சரிசமமாக ஊதியம் வழங்க உத்தரவு பிறப்பித்து வரலாற்றை மாற்றி உள்ளது பிசிசிஐ தலைவர் ரோஜர் மற்றும் செயலாளர் ஜெய்ஷா.

இந்திய ஆண்களுக்கு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போல பெண்கள் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணியினரின் பங்கு அதிகம் பிரதிபலிக்கும் என்பதில் ஐமில்லை.

இந்த போன்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினருக்கு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here