சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் முன்னணி வீராங்கனையான சானியா மிர்ஸா நேற்று நடந்த பிரேசில் அணியுடனான போட்டியில் தோல்வியுடன் ஓய்வு பெற்றார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்து பல விருதுகளை பெற்றவர். சானியா இதுவரை இரண்டு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். 2016 இல் மார்டினா ஹிங்கிஸுடன் பெண்கள் இரட்டையர் மற்றும் மற்றொன்று 2009 இல் மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளரை மணந்து கொண்டு வாழ்ந்து வந்தார். நேற்று ஆஸ்திரேலியாவில் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பண்ணாவுடன் சேர்ந்து சானியா மிர்சா பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது.

இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரேசில் அணியின் இணை விளையாடி வெற்றி பெற்றனர். சானியா மிர்சாவிற்கு இது இறுதி ஆட்டம் என்பதால் வெற்றியுடன் விடை பெற எண்ணினார். அதற்காக தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தினார். இருப்பினும் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்து டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
நேற்று நடந்த போட்டியை காண சானியாவின் மகனும் வந்திருந்தார். அவர் முன்னிலையில் தோல்வியை தழுவி இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று கண்ணீருடன் வெளியேறினார்.
இப்போட்டியின், இறுதியில் 6-7 (2), 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் லூயிசா ஸ்டெபானி – ரஃபேல் மாடோஸ் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனால், கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார். அவருக்கு அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி, வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: திருமண பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் பெற்ற நட்சத்திர தம்பதி
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.