லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘லியோ’. சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே த்ரிஷா நடிக்கும் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுவிட்டன. பின்னர் மிஷ்கின் நடிக்கும் காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்ட பின்பு அவர் சென்னை திரும்பினார். அவர் தன் படத்தில் நடித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் 7 வில்லன்கள் நடிக்கின்றனர். அவர்களுக்கு தலைவனாக இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதையடுத்து மும்பையிலிருந்து காஷ்மீருக்கு நேற்று அதிகாலை வந்தார் சஞ்சய் தத். பின்னர் லியோ படப்பிடிப்பில் கலந்து காெண்டார். அவருடன் கவுதம் மேனன், அர்ஜீன் ஆகியோரும் சேர்ந்து நடித்து வருகிறார்கள். விஜய், சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளை அடுத்த மாதம் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.