சந்தானம்: விஜய் டிவியின் ‘லொள்ளுசபா’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் சந்தானம். அதன் பிறகு சிம்பு நடித்த மன்மதன் படம் மூலம் காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி ஹீரோக்களின் பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த சந்தானத்துக்கு திடீரென ஹீரோ ஆசை வந்தது. இதையடுத்து அடுத்தடுத்து பல படங்களில் அவர் ஹீரோவாக நடித்தார். ஒரு சில படங்கள் மட்டுமே அவர் ஹீரோவாக நடித்து ஓடின. பெரும்பாலான சந்தானத்தின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் மீண்டும் இன்னொரு ஹீரோக்களின் படத்தில் காமெடி செய்ய அவருக்கு வாய்ப்புகள் வந்தபடி இருக்கிறது. தொடர்ந்து ஹீரோவாகா நடிப்பதா இல்லை காமெடி கேரக்டருக்கு திரும்பி விடுவதா என்பதை தீர்மானிக்க முடியாமல் அவர் குழப்பத்தில் இருந்தார்.
இந்நிலையில் அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் நடிப்பதற்காக சந்தானத்திடம் பேசியுள்ளனர். கடைசியாக அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் காமெடியனாக சந்தானம் நடித்திருந்தார். இப்போது திரும்பவும் அவர் அஜித் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
ஹீரோவாக நடித்துக்கொண்டே காமெடி கேரக்டர்களிலும் நடிக்க சந்தானம் முடிவு செய்துள்ளாராம். ராஜேஷ்.எம் இயக்கும் ஒரு படத்திலும் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.