தசரா: தெலுங்கு நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘தசரா’. இப்படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்க, ஸ்ரீலக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘தீக்காரி’ பாடல் வெளியாகியுள்ளது. ‘தீக்காரி தூரம் ஆக்குறியாடி’ என்ற பாடல் மென்மையான சோகம் கலந்த காதல் பாடலாக உருவாகியுள்ளது. கதாநாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவர் இப்படத்திற்கு இசையமைத்தது மட்டுமின்றி இப்பாடலின் வீடியோவில் திடீரென்று தோன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹீரோ நானியுடன் இணைந்து அவர் அப்பாடலில் நடனம் ஆடியுள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார், ஜரீனா வஹாப் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது.