வசூல் சாதனை புரிந்து வருகின்ற திரைப்படம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி சிறப்பான வசூலை ஈட்டி வருகின்றது. தற்போது இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ஈட்டிய திரைப்படங்களின் லிஸ்டில் இணைந்துள்ளது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையும் புரிந்து வருகின்றது. இப்படத்தை பி.எஸ்.மித்ரம் இயக்கியுள்ளார். ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்தி, தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் தண்ணீர் மாஃபியா, உளவாளியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: கமலஹாசனின் 234 வது படத்தின் அடுத்த பயணம் 35 ஆண்டுகளுக்கு பின்
இந்த படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரித்துள்ளார். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் சார்பில் இயக்குனர் மித்ரனுக்கு டோயோட்டா பார்டியுன் காரை பரிசாக சமீபத்தில் வழங்கினர். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ரிலிசாக வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் மிகுந்த வரவேற்பில் வெளியான போதிலும் சரியான வெற்றியை பெறவில்லை வசூலிலும் வரவேற்பு பெறாமல் இருக்கின்றது. அதே வேலையில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் வரவேற்பையும் பெற்று வசூலிலும் 100 கோடி வசூல் செய்த படங்களின் வரிசையில் கை கோர்த்துள்ளது.
இதற்குமுன் இரும்புதிரை, ஹீரோ திரைப்படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன் இந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை தந்தது. அந்த கூட்டணியில் இந்த படமும் நல்ல வசூல் செய்த படங்களின் வரிசையில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.