உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபியா அரசு திட்டம்.
தற்போதைய உலகின் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபாவை விட உயரமானதாகவும், அதிநவீன வசதிகளுடனும் உடைய கட்டிடத்தை கட்ட சவுதி அரேபிய அரசு அதிரடித் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது உள்ள புர்ஜ் கலிபா 828 மீட்டர் உயரம் உடையது. மொத்தம் 160 மாடிகள் கொண்டது. இதன் 122 வது மாடியில் உயர்தர உணவகம் செயல்படுகிறது. இதில் 125வது மாடி வரை மட்டுமே மக்கள் மற்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். புர்ஜ் கலிஃபா கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகும். இதை போல மிக உயரமான கட்டிடங்கள் அனனத்தும் அதிகமாக துபாயில் காணப்படுகிறது.

உலகின் மிக உயரமான கட்டிடத்தை 95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே பார்க்க முடியும். இவ்வளவு பெரிய கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் கட்டுமான பணியில் தினம்தோறும் 12 ஆயிரம் தொழிலாளிகள் பணி ஆற்றினர். இவ்வளவு கட்டுமான தொழிலாளர்கள் கலந்துகொண்ட போதிலும் இந்த கட்டிடத்தை 2004 ஆண்டில் கட்ட தொடங்கி ஆறு ஆண்டுகளாகி 2010ம் ஆண்டில் முடிவுபெற்றது.
தரைப்பகுதியில் உள்ள வெப்பநிலையை விட புர்ஜ் கலிபாவின் உச்சியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்குமாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் கட்டிடத்தை பார்க்க வேண்டுமென்றில் முன் கூட்டியே 3500 ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் பார்வையாளர்கள் அங்கு செல்லலாம். முதலில் உங்களை லிப்ட்டில் நுழைத்து 125 மாடிக்கு அழைத்து செல்வார்கள்.
இந்நிலையில் இதைவிட மிக உயரமான கட்டித்தைக் கட்ட சவுதி அரேபிய அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளது.