சாவர்க்கர் பற்றி கர்நாடக பள்ளி பாடப் புத்தகத்தில் அவர் சிறையில் இருந்த போது புல்புல் பறவையின் சிறகில் அமர்ந்து தன் தாய் நாட்டிற்கு தினமும் சென்று வருவார் என 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ளது இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்பவர் ஓரு இந்துத்துவக் கொள்கையை உடையவர். கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதில் கர்நாடக 8ம் வகுப்பு பள்ளிப் கன்னடப் பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றிய புதிய இணைப்பு இணைக்கப்பட்டது.
அதில் ‘காலத்தை வென்றவர்க’ என்ற பாடப்பகுதியில் சாவர்க்கர் யார் என்பதை விளக்கும் வகையில் பாடம் இடம் பெற்றிருந்தது. 1911-ம் ஆண்டு முதல் 1924-ம் ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்தபோது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தாய்நாடு வந்து செல்வார்’ என எழுதப்பட்டிருக்கிறது.

சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில் ஒரு சிறிய துளைகூட இல்லை. ஆனாலும் புல்புல் பறவைகள் எப்படியாவது அந்த அறைக்குள் நுழைந்துவிடும். அவற்றின் இறக்கையில் அமர்ந்து சாவர்க்கர் அவருடைய சொந்த ஊருக்குப் பறந்து செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது. சிலர் இந்தப் பத்தியில் உள்ள வரிகள் அப்படியே பொருள்கொள்ளப்படும்போது மாணவர்களை மிகவும் குழப்பும் எனக் கூறியுள்ளனர். இதுவே சர்ச்சைக்கான காரணமாக அமைந்திருக்கிறது.
கர்நாடக பாடநூல் திருத்தக் குழுவின் தலைவர் ரோகித் சக்ரதிர்தா இது குறித்து அளித்த விளக்கத்தில், ‘சவார்க்கர் குறித்த அந்த வரியானது ஒரு பேச்சு உருவகமே தவிர, சாவர்க்கர் புல்புல் மீது பறந்தார் என்ற நேரடியான கூற்று கிடையாது.