ஒரு வருடத்திற்கு பிறகு குழந்தையை காட்டிய ஆர்யா – சாயிஷா தம்பதியினர்

0
16

ஆர்யா: வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி படங்களில்  ஹீரோயினாக நடித்தவர் சாயிஷா. இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் சிறந்த பெல்லி டான்சர். இவரும் ஆர்யாவும் இணைந்து பணியாற்றும்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. பின்னர் இவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதுவரை தம்பதியர் இருவரும் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்கு காட்டாமல் இருந்தனர். சமீபத்தில் வந்த ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் சாயிஷா வெளியிட்டார்.

sayeesha introduces her baby ariana

இந்த புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் சாயிஷா வெளியிட்ட பதிவில், ‘அன்பான கணவராகவும், பொறுப்பான தந்தையாகவும், நல்ல மனிதராகவும் (ஆர்யா) நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பிறந்த தினத்தில் நமது மகளை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறேன். ஒன்றாக இருந்த எனது சந்தோஷம் இரண்டாக மாற இவள்தான் காரணம்’ என கூறியுள்ளார். மேலும் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் படிக்கும் 10 ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதனை ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படக்குழு வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here