வெந்து தணிந்தது காடு சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான நிலையில் இன்று திரையில் ரீலிஸ் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வரும் திரை பிரபலங்கள்.
சிம்பு நடிப்பில் உருவான மாநாடு மிக பெரும் வெற்றியை தந்தது அதனை தொடர்ந்து கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து 3 வது படத்தில் இருவரும் இணைந்து உள்ளனர்.
வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவின் ஜோடியாக சித்தி இதானி அறிமுகமாகி நடித்துள்ளார். இப்படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சிம்புவின் தாயாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது இன்று செப் 15 திரைக்கு வரும் என கூறியிருந்தது படக்குழு அதன்படி இன்று திரைக்கு ரீலிஸ் ஆனது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் இப்படம் வெற்றி நடை போடுகிறது. இந்த படத்திற்கு திரை பிரபலங்கள் பலர் டிவிட்டர் வாயிலாக வாழ்த்தும் படத்தின் வெற்றியையும் பதிவு செய்து வருகின்றனர்.
வெந்து தணிந்தது காடு குறித்து நிறைய நல்ல செய்திகளைக் கேட்க முடிகிறது. படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன், என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Hearing such good things about #VTK.. Waiting to watch.. Happy for @menongautham
Rock on @silambarasanTR_ Best wishes for a huge success team!! @arrahman sir @VelsFilmIntl @RedGiantMovies_— Suriya Sivakumar (@Suriya_offl) September 15, 2022
Hearing such good things about #VTK.. Waiting to watch.. Happy for @menongautham
Rock on @silambarasanTR_ Best wishes for a huge success team!! @arrahman sir @VelsFilmIntl @RedGiantMovies_— Suriya Sivakumar (@Suriya_offl) September 15, 2022
சிம்புவுக்கும், கவுதம் மேனனுக்கும் நடிகர் சூரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
@SilambarasanTR_ sir and @menongautham sir
successful combo 👍 #VendhuThanindhathuKaadu
best wishes for great success 💖
Songs very nice @arrahman sir 🥰 pic.twitter.com/SYnqj0YWOx— Actor Soori (@sooriofficial) September 15, 2022
கடின உழைப்பும் நம்பிக்கையும் என்றும் தோற்பதில்லை நண்பா என சிம்புவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் மஹத்.
Hard work and faith never fails my friend. You have proved it yet again with an other Blockbuster.🔥 #VTK #CultClassicVTK #VendhuThanindhathuKaadu #SilambarasanTR @SilambarasanTR_ 🤗🤗🤗❤️ pic.twitter.com/yy4j3rMwKl
— Mahat Raghavendra (@MahatOfficial) September 15, 2022
வெந்து தணிந்தது காடு படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Best wishes to @SilambarasanTR_ sir @menongautham sir and the entire team of #VendhuThanindhathuKaadu for a grand success👍😊
Loving @arrahman sir’s songs esp #MarakkumaNenjam ❤️❤️— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 14, 2022
இது போன்று பலர் இப்படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் இப்படம் வெற்றி பெற வாழ்துகிறோம் என்றும் டிவிட்டர் இணையதளத்தின் வாயிலாக அறிவித்த வண்ணம் உள்ளனர்.