மெரினா கடலில் 134 அடி உயரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரை போற்றும் வகையில் அவர் பயன்படுத்திய பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கடிதம் சமர்பித்தார்.
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை சாலை என்ற பெயருக்கு சொந்தமான சென்னை மெரினா கடலில் முன்னாள் திமுக மற்றும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவிலான நினைவு சின்னத்தை 134 அடி உயரத்தில் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்காக 80 கோடியை நிதி ஓதுக்கியது.
இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான கருத்துகளை தெரிவிக்க பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று கலைவாணர் அரங்கில் இதற்கான கருத்து தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஓருங்கிணைப்பாளர் சீமான் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர் அரை வெளியேற சொல்லி கோஷமிட்டு கொண்டு இருந்தனர். அப்போது பேசிய சீமான், ”உங்களை நினைவு சின்னம் கட்ட வேண்டாம் என்று கூறவில்லை அதை ஏன் கடலில் கட்ட வேண்டும் என்று தான் கேட்கிறோம். ஏன் உங்கள் தலைவரின் நினைவு சின்னத்தை அறிவாலையத்தில் கட்ட வேண்டியது தானே? என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேம்படுத்த போதுமான நிதி வசதிகள் இல்லை என்று கூறும் அரசு இந்த நினைவு சின்னத்தை கட்ட மட்டும் எங்கிருந்து வந்தது நிதி என்றும் கடலில் கட்டப்படும் நினைவு சின்னத்தால் கடலில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போகும் அது மட்டும் அல்லாமல் 12 மீனவ கிராமங்கள் அடியோடு அழிந்து போகும் இப்படி பல பிரச்சனைகள் உள்ள நிலையில் கடலில் நினைவு சின்னத்தை அமைக்க எப்படி அனுமதி வழங்க முடியும் என்று கூறி தனது முழு எதிர்பை தெரிவித்து வெளியேறினார் சீமான்”.
இதையும் படியுங்கள்: உலகம் முழுவதும் வெளியாகிய பதான் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது
இது போன்ற தகவல்களை தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.