விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் தடை எச்சரிக்கும் சீமான்

0
5

விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் தடை விழாக் காலங்களில் நேரடித்  தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை என தெலுங்கு திரைப்பட சங்கத்தினர் அறிவிப்பு இதனை எதிர்த்து எச்சரிக்கை விடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான்.

நடிகர் விஜய் தமிழகத்தில் முன்னணி நடிகராக ஏகோபித்த ரசிகர்களை கொண்டவர் இவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு திரைப்பட சங்கம் விழாக் காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை எனவும் வாரிசு திரைப்படத்திற்கு முன்னுரிமை இல்லை எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி தமிழ் திரைப்பட சங்கத்திற்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் இது போன்றதொரு அறிவிப்பை எப்போதும் தமிழ் திரைப்பட சங்கங்கள் வெளியிட்டதில்லை. தெலுங்கு படமான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, காந்தார், கே.ஜி.எப் போன்ற படங்களுக்கு எவ்வித பாகுபாடும் தமிழ் திரைப்பட சங்கத்தினர் காட்டாத போது தமிழ் திரைப்படங்களுக்கு இது போன்றதொரு அறிவிப்பை எப்படி ஏற்பது இது கண்டிக்க தக்கது என்றும் தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் நிறுவனருமான சீமான்.

விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் தடை எச்சரிக்கும் சீமான்

ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மூன்று மாநில திரைத்துறையினருக்கும் புகழிடமாகவும் மூலமாகவும் விளங்கிய தமிழ்த் திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு மிகவும் கண்டிக்க தக்கது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அன்பு தம்பி விஜய் இவரது படத்திற்கே திரையரங்க ஓதுக்கீட்டில் இவ்வளவு பிரச்சனையானால்  தெலுங்கு நேரடி திரைப்படங்களோ மொழு மாற்றம் செய்யப்பட்ட தெலுங்கு திரைப்படங்களோ எவ்வித பாரபட்சமும் இன்றி எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தாது தமிழ் திரைப்படங்களுக்கு இணையாக தெலுங்கு திரைப்படங்களும் விழாக் காலங்களில் வெளியாகும் போது இது ஆந்திர மாநில திரைப்பட சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஓன்றாகும்.

கலைக்கு மொழி இல்லை எனக் கூறி தமிழ்த் திரைப்படங்களுக்கு இணையாக தமிழகத்தில் தெலுங்கு படங்களுக்கு திரையரங்குகள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வெளியாகி பெரும் வசூல் மழை பொழிந்துள்ளது. இந்த தடை விஜய் என்ற ஓரு நடிகரின் படத்திற்கு எதிரானது இல்லை தமிழ் திரைப்படங்களுக்கு எதிரானதாக இருக்கிறது இது வஞ்சிக்கும் செயல் இதை ஓரு போதும் ஏற்கவோ அனுமதிக்கவோ முடியாது என சீமான் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்: தளபதி 67 படத்திற்கான ஸ்டிரிமிங் அதிகாரத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்

தெலுங்கு திரைப்பட சங்கத்தினர் இந்த தடையை உடனடியாக விலக்காவிட்டால் தமிழகத்தில் ஓரு தெலுங்கு திரைப்படங்கள் கூட வெளியாகாது என்பதை எச்சரிக்கை விடுக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற பலவிதமான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here